>

எம்மைப் பற்றி

மக்கள் பாதுகாப்பகம் மனித உரிமை மீறல்களினால் இன்னல்களுக்குள்ளாகும் மக்களை கண்டறிந்து அவர்களின் உரிமைகளை மீட்டளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற ஒரு பொது நல அமைப்பாகும். தமிழகத்தைச் சார்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் இளம் வழக்குரைஞர்களால் கடந்த 2007ம் ஆண்டு துவக்கப்பட்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

மகளிர், குழந்தைகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் தங்கள் உரிமைகளைப் பற்றி அறியவும் அவ்வுரிமைகள் அரசுகள் மற்றும் காவல்துறையினர் மற்றும் சிறப்புப் படைக் குழுக்கள் போன்ற அதிகார வர்க்கங்களினால் மீறப்படும்பொழுது அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளையும் இதர உதவிகளையும் மக்கள் பாதுகாப்பகம் அளித்து வருகின்றது.

இன்று இணைய தளம் மூலமாக உலகெங்கும் நடக்கும் மனித உரிமை மீறல்களை மக்கள் பார்வைக்கு எடுத்துச் சென்று அவற்றிற்கெதிரான நிலைப்பாட்டினை உருவாக்கும் முயற்சியில் மக்கள் பாதுகாப்பகம் ஈடுபட்டு வருகின்றது.